'பிரதர்' படத்தின் 'மக்காமிஷி' வீடியோ பாடல்! 10 மில்லியன் பார்வைகளை கடந்தது! - Seithipunal
Seithipunal


நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் தற்போது ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிக்கும் 'பிரதர்' படத்தில் நடித்துள்ளார்.

இந்தபடத்தில் நடிகை பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க, நட்டி, பூமிகா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், சீதா, அச்யுத், பிரபல தெலுங்கு நடிகர் ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

அனைத்து தரப்பு ரசிகர்களும் கண்டு கழிக்கும் வகையில் கலகலப்பான ஒரு குடும்ப படமாக உருவாகி உள்ளது.

அக்கா – தம்பி உறவை அடிப்படையாக கொண்ட படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. 

2012 ஆம் ஆண்டு வெளியான 'ஒரு கல் ஒரு கண்ணாடி'க்குப் பிறகு இயக்குநர் ராஜேஷும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜும் மீண்டும் இணைந்து பணியாற்றியுள்ளார். இந்த படத்தில் உள்ள பாடல்கள் மீது பெரிதும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. விவேகானந்த் சந்தோஷ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், கடந்த மாதம் 20-ந் தேதி இப்படத்தின் 'மக்காமிஷி' பாடல் வெளியானது. ரசிகர் மத்தியில் மிகவும் வைரலான நிலையில், தற்போது இப்பாடல் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. படக்குழுவினர் இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவினை வெளியிட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Makamishi video song from Brother Crossed 10 million views


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->