தலைவா...பேட்ட படத்தை பார்த்துவிட்டு, புகழ்ந்து தள்ளிய மாபெரும் பிரபலம்! - Seithipunal
Seithipunal


 கார்த்திக் சூப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் பேட்ட. ரஜினியுடன் இணைந்து விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக், சனந்த் ஷெட்டி, ஆடுகளம் நரேன், குரு சோமசுந்தரம், யோகி பாபு, சசிகுமார், விவேக் பிரசன்னா, ராமசந்திரன் துரைராஜ், தீபக் பரமேஸ், மேகா ஆகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தை ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரையுலக பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

    

இந்நிலையில், பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, பேட்ட படத்தை பார்த்துவிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . 

‘பேட்ட ரஜினி ரசிகர்களுக்கான படம். அந்த ரசிகர்களில் நானும் ஒருவன். ஒரே ஒரு வார்த்தைதான் தலைவா. கார்த்திக் சுப்புராஜ் சிறந்த திறமையான இயக்குனர்களில் ஒருவர். ஒளிப்பதிவாளர் திரு வழக்கம் போல் சிறப்பாக பணியாற்றியுள்ளார். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்’ என்று பதிவு செய்திருக்கிறார்.
 

English Summary

mahesh babu wish petta movie


கருத்துக் கணிப்பு

இந்திய அணியில் நான்காவது இடத்தில் யாரை களமிறக்கலாம்?
கருத்துக் கணிப்பு

இந்திய அணியில் நான்காவது இடத்தில் யாரை களமிறக்கலாம்?
Seithipunal