மீண்டும் அண்ணா வேண்டும் அண்ணா..!! மதுரை விஜய் ரசிகர்களின் சுவரோட்டி..!! - Seithipunal
Seithipunal


விஜய் ரசிகர்கள் ஒட்டிய சுவரோட்டி மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சுவரோட்டியை வைத்து பரபரப்பை ஏற்படுத்துவதில் மதுரைகாரர்களை அடித்து கொள்ளவே முடியாது. அதிலும், விஜய் ரசிகர்கள் சுவரோட்டிகள் தனி ரகமாக இருக்கும்.

அதே போல இன்று அண்ணா பிறந்தநாள் கொண்டாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரையில் விஜய் ரசிகர்கள் அண்ணா படத்தை விஜய் படமாக மார்பிங்க் செய்து சுவரோட்டியை ஒட்டியுள்ளனர்.

இந்த சுவரோட்டியில் நாட்டிற்காக உழைப்பதற்கே அண்ணா பிறந்தார், பொது நலத்தில் தானே முழுக்க கண்ணாயிருந்தார்... எங்கள் கடன் தீர மீண்டும் அண்ணா, தமிழர் நீங்கள் வேண்டும் அண்ணா  என வாசகங்களை அச்சிட்டுள்ளனர்.

இந்த சுவரோட்டி தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. எந்த அரசியல் சார்ந்த நிகழ்வேன்றாலும் விஜயின் ரசிகர்கள் அவரை அரசியலுக்கு அழைக்கும் வகையில் சுவரோட்டிகளை ஒட்டுவது சமீபத்தில் அதிகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

madurai vijay Fans Poster


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->