'இரண்டே வாரம்' விஷாலுக்கு கெடு விதித்த உயர்நீதிமன்றம்.!  - Seithipunal
Seithipunal


நடிகர் விஷாலின் சொத்து விவரங்களை முழுமையாக தாக்கல் செய்ய விஷாலுக்கு இரண்டு வாரங்கள் அவகாசம் கொடுத்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

பிரபல நடிகரும் தயாரிப்பாளனுமான விஷால் தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்திற்கு கோகுலம் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து ₹.29.29 லட்சம் கடன் பெற்றிருந்தார். இந்த கடனை லைக்கா தயாரிப்பு நிறுவனம் ஏற்று கடனை செலுத்தியது. இந்த கடனை ஏற்று செலுத்துவதற்காக நடிகர் விஷால் மற்றும் லைகா நிறுவனத்திற்கு இடையில் ஒப்பந்தம் போடப்பட்டது.

இந்த கடனை செலுத்தும் வரை விஷால் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமையையும் லைக்கா நிறுவனத்திற்கு தான் கொடுக்க வேண்டும் என்று அந்த ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இத்தகைய சூழலில், கடனை முழுதும் திருப்பி தராமல் நடிகர் விஷால் வீரமே வாகை சூடும் திரைப்படத்தை தமிழ் மற்றும் பிற மொழிகளில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் லைக்கா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை சமீபத்தில் உயர் நீதிமன்றம் விசாரித்த நிலையில் விஷாலின் முழு சொத்து விபரங்களை தாக்கல் செய்ய கோரி இந்த வழக்கு விசாரணையை செப்டம்பர் 9ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உயர் நீதிமன்றம் தற்போது உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்பொழுது விஷாலின் முழு சொத்து விவரங்களை சமர்ப்பிக்க அவகாசம் தேவை என்று விஷால் தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற உயர் நீதிமன்றம் விஷாலுக்கு இரண்டு வார காலம் அவகாசம் விதித்து அதற்குள் சொத்து விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறி உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madras Highcourt judgement in Vishal case


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->