மாநாடு திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா.? - Seithipunal
Seithipunal


இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள திரைப்படம் தான் மாநாடு. இந்தப் படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் எஸ் ஏ சந்திரசேகர், பாரதிராஜா, பிரேம்ஜி, எஸ் ஜே சூர்யா, கருணாகரன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.  இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும், இந்தப்படத்தை வி ஹவுஸ் புரோடக்சன் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

மாநாடு திரைப்படம் கடைசி நேரம் வரை வெளியாகுமா? ஆகாதா? என படக்குழுவினர் பயத்துடன் இருந்த நிலையில், அனைத்து பிரச்சினைகளுக்கும் சுமுக பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணப்பட்டு, திட்டமிட்டபடி நேற்று மாநாடு திரைப்படம் வெளியானது. இதனால் சிம்பு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். 

மாநாடு திரைப்படத்தை பார்த்த பலரும் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வரும் நிலையில், டிக்கெட் புக்கிங் மேலும் அதிகரித்துள்ளது. திரையரங்களில் மேலும் அதிகமான காட்சிகளும், திரையரங்கிலும் ஒதுக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், தமிழ்நாட்டில் சிம்புவின் மாநாடு திரைப்படம் முதல் நாளில் 5 முதல் 7 கோடி வரை வசூல் ஈட்டி உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தை மட்டுமின்றி உலகம் முழுவதும் மாநாடு வெளியான நிலையில்,  தமிழகத்தை தவிர்த்து 3 கோடி அளவுக்கு இந்த படம் முதல்நாளில் வசூல் ஈட்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் தமிழ்நாட்டில் 7 கோடி மற்றும் பிற மாநிலங்கள் வசூலை சேர்த்து ஒட்டுமொத்தமாக முதல் நாளில் மாநாடு திரைப்படம் அதிகபட்சமாக 10 கோடி ரூபாய் வசூலித்து இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

maanaadu first collection


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->