ரசிகர் மீது பாய்ந்த லட்சுமி மேனன்.! என்னடா இந்த பொண்ணு தர லோக்கலா பேசுது?!  - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, முக்கிய இடத்தை பெற்ற நடிகையில் மறக்க முடியாத நடிகை லட்சுமி மேனன். இவர் இறுதியாக விஜய் சேதுபதியுடன் றெக்க திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை.

இதனையடுத்து தான் படிக்க போவதாக திரைப்படங்களை ஒதுக்கிவைத்துவிட்டு, படிக்க சென்ற சென்றார். இப்போது நான்கு வருடத்திற்கு பின்னர் மீண்டும் திரைத்துறைக்கு தான் அறிமுகமாகும் நிலையில், தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தார். 

மேலும், மீண்டும் கும்கி நாயகன் விக்ரம் பிரபுவுடன் லட்சுமி மேனன் நடிக்கவுள்ள நிலையில், இந்த படத்தை இயக்குனர் சுசீந்திரன் இயக்கவிருக்கிறார். இந்த படத்திற்கு பின்னர் ஹீரோயினாக நடிகை ஸ்ரீ திவ்யாவும் நடிக்கவுள்ள நிலையில், நடிகை ஸ்ரீ திவ்யாவும் கடந்த 2017 ஆம் வருடத்தில் கடைசியாக நடித்தது குறிப்பிடத்தக்கது. 

இவர்கள் இருவரும் தனித்தனியாக வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இவர்களின் ரீ என்ட்ரி இப்போதே பரபரப்பாக திரைத்துறை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது லட்சுமி மேனன் தனது சமீபத்திய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளார். 

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் அவரிடம் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விடுங்கள், அதுதான் அமைதியான வாழ்க்கையை தரும் என கமெண்ட் செய்தார். இதற்கு லட்சுமி மேனன் செம கடுப்பாகி, "நீ யார்ரா, என்ன கல்யாணம் பண்ணிக்க சொல்றதுக்கு?" என்ற பாணியில் அந்த ரசிகரை வெளுத்து வாங்கிவிட்டார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lakshmi menon harshly speech with fan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->