அப்ப இல்லையா? லட்சுமி மேனன் அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த சோகம்.!  - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, முக்கிய இடத்தை பெற்ற நடிகையில் மறக்க முடியாத நடிகை லட்சுமி மேனன். இவர் இறுதியாக விஜய் சேதுபதியுடன் றெக்க திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை.

இதனையடுத்து தான் படிக்க போவதாக திரைப்படங்களை ஒதுக்கிவைத்துவிட்டு, படிக்க சென்ற சென்றார். இப்போது நான்கு வருடத்திற்கு பின்னர் மீண்டும் திரைத்துறைக்கு தான் அறிமுகமாகும் நிலையில், தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தார். 

மேலும், மீண்டும் கும்கி நாயகன் விக்ரம் பிரபுவுடன் லட்சுமி மேனன் நடிக்கவுள்ள நிலையில், இந்த படத்தை இயக்குனர் சுசீந்திரன் இயக்கவிருக்கிறார். இந்த படத்திற்கு பின்னர் ஹீரோயினாக நடிகை ஸ்ரீ திவ்யாவும் நடிக்கவுள்ள நிலையில், நடிகை ஸ்ரீ திவ்யாவும் கடந்த 2017 ஆம் வருடத்தில் கடைசியாக நடித்தது குறிப்பிடத்தக்கது. 

இவர்கள் இருவரும் தனித்தனியாக வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இவர்களின் ரீ என்ட்ரி இப்போதே பரபரப்பாக திரைத்துறை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகை லட்சுமி மேனன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவதாக வதந்திகள் வெளியானது. ஆனால், அது உண்மையல்ல என்று லட்சுமி மேனன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lakshi menon speech about bigg Boss


கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
Seithipunal