பிரபல நடிகைக்கு குடும்பத்தோடு கொரோனா தொற்று.! மருத்துவமனையில் தஞ்சம்.! பதறும் ரசிகர்களின் நெஞ்சம்.!  - Seithipunal
Seithipunal


உலக நாடுகள் அனைத்தையும்,  அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஆறு மாதங்களாக உலக சுகாதார மையம் அந்தந்த நாட்டு அரசுகளுடன் இணைந்து போராடி வருகின்றது. இருப்பினும், கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இயலவில்லை. 

உலக அளவில் இந்த வைரசால் பல்வேறு தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர். தமிழகத்தில் பொதுமக்கள் மட்டுமின்றி, சட்டமன்ற உறுப்பினர்கள், திரைத்துறை பிரபலங்கள் என்று அனைத்து தரப்பு மக்களும் இதனால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், வங்காள நடிகையான கோயல் மாலிக் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்து நடிகை கோயல் மாலிக் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தகவலை பகிர்ந்துள்ளார். தற்போது தனது குடும்பத்தினருடன் அவர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். 

இவர்கள் உடல் நலம் பெற்று திரும்ப வர வேண்டும் என்று பல்வேறு பிரபலங்களும் ட்விட்டரில் தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக நடிகையின் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருப்பதாக தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Koel mallick family attacked by corona virus.


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->