ரஜினியுடன் நடிக்க போகும் கீர்த்தி சுரேஷ்! அறிவிப்பு வெளியானதும் போட்ட ட்விட்! - Seithipunal
Seithipunal


சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்திற்கான கதாநாயகியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. நடிகர் அஜித்தின் படங்களை தொடர்ந்து இயக்கி வந்த இயக்குனர் சிறுத்தை சிவா அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்தை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். 

தற்போது தர்பார் படத்தில் நடித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், அடுத்ததாக பெயரிடப்படாத இந்தப் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பார் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. நடிகை கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா சுரேஷ் ஏற்கனவே 1981 ஆம் ஆண்டு இயக்குனர் எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த நெற்றிக்கண் என்ற திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது. 

இந்த அறிவிப்பு வெளியானதும் தனது மகிழ்ச்சியை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். தலைவர் 168 படத்தில் இணைந்தது எனது சினிமா வாழ்க்கை பயணத்தில் மந்திர மைல்கல்லாக இருக்கும். ரஜினிகாந்த் சாருடன் இணைந்து நடிக்க போகிறோம் என்ற பிரமிப்பில் இருக்கிறேன். இந்த படம் என் வாழ்க்கையில் எனக்கு மிகவும் பிடித்த நினைவகமாக இருக்கும். நன்றி என கூறி, இயக்குனர் சிறுத்தை சிவாவையும், சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தையும் டேக் செய்து பதிவிட்டுளளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

keerthy suresh tweet about rajini168


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->