கார்த்தி- விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் படத்தின் பெயர் இதுவா.?! - Seithipunal
Seithipunal


ஹீரோவாக நடிக்கும் நடிகர்கள் அவ்வளவு சீக்கிரம் தனது கதாபாத்திரத்தை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். ஒரு ஹீரோ ஒரு படத்தில் வேறு கதாபாத்திரத்தில் நடித்த பின்னர் அவருக்கு மீண்டும் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்றால் அது கேள்விக்குறிதான். 

இந்த பயத்தினால் பலரும் ஹீரோவை தாண்டி எந்த கதாபாத்திரத்தில் நடிப்பது இல்லை. ஆனால் இதற்கெல்லாம் விதிவிலக்காக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் விக்ரம் வேதா படத்தில் முதன் முதலில் வில்லனாக நடித்தார். அதனைத் தொடர்ந்து தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்தார். 

அதன்பிறகு சில படங்களில் தற்போதுஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் கமலுக்கு அதனால் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். அடுத்ததாக இயக்குனர் ராஜமோகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகவிருக்கும் ஒரு புதிய படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. 

ஹீரோவாக நடிப்பதை விட விஜய் சேதுபதியின் வில்லன் கதாபாத்திரத்திற்கு நிறைய ரசிகர் கூட்டம் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கார்த்தி விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ஜப்பான் என்று பெயர்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்  வெளியாகி இருக்கின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karthi Vijay sethupathy movie name as japan


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->