சர்தார் 2 படத்தின் வேலைகளை துவங்கிய படக்குழு.. இசையமைப்பாளர் இவரா‌.? - Seithipunal
Seithipunal


கார்த்தியின் சர்தார் 2 படத்தின் வேலைகளை படக்குழு தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் சர்தார். வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்த படத்தின் வெற்றி விழாவின்போது, சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என்பதை தயாரிப்பாளர்கள் உறுதி செய்தனர். அதன்படி சர்தார் 2 திரைப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் எனவும் இந்தாண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் சர்தார் 2 படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. முதல் பாகத்தில் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்த நிலையில், தற்போது யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karthi in sardar 2 movie shooting starts soon


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->