கார்த்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த படக்குழு.!  - Seithipunal
Seithipunal


நடிகர் கார்த்தி நடிப்பில் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகின்ற படம் தான் சர்தார். இதில், நடிகர் கார்த்தி இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குறிப்பாக, கார்த்தி ஒரு தோற்றத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகின்றார்.

அதேபோல் தற்பொழுது இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றி வெளியிட்டு இருக்கின்றது. இந்த படத்தில் ஹீரோயினாக ராஷிகண்ணா நடித்து இருக்கின்றார். 

அதுபோல முதன்முறையாக பி.எஸ்.மித்ரன் இயக்குகின்ற திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்து இருக்கின்றார். சர்தார் படத்தை தீபாவளியை முன்னிட்டு கடந்த 21 ஆம் தேதி வெளியிட பட்டது. இந்த நிலையில் சர்தார் படத்தின் 11 வது நாள் கலெக்ஷன் முடிவு தற்போது வெளியாகியுள்ளது. 

அதன்படி, 45 கோடி பட்ஜெட்டில் உருவான சர்தார் படம் இதுவரை 80 கோடிகள் வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், இந்த திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை aha ஓ.டி.டி தளத்திற்கு விற்பனை செய்து இருக்கின்றனர். வரும் நவம்பர் 18-ல் படம் ஓடிடியில் வெளியாக இருக்கின்றது. படம் அக்டோபர் 21 -ல் வெளியாகி இருக்கின்ற நிலையில், படம் வெளியாகிய ஒரு மாதத்திற்குள் இது ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karthi fans Shock about sardhar OTT Release


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->