கமல்ஹாசனுடன் 19 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணையும் பிரபல நடிகை! - Seithipunal
Seithipunal


மணிரத்தினம் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'தக் லைஃப்'. இந்த திரைப்படத்தில் திரிஷா, துல்கா ஷர்மா, ஜெயம் ரவி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். ஆர்.கே. சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். 

இந்த படத்தின் அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல கவனத்தைப் பெற்றது. இந்நிலையில் இந்த திரைப்படத்தில் நடிகை அபிராமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் தொடங்கப்படும் இந்த படத்தில் படப்பிடிப்பிலும் இணைய உள்ளதாக தகவல் வெளியாக்கியுள்ளது. 

கமல்-அபிராமி இணைந்து கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான 'விருமாண்டி' திரைப்படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தில் இருவரின் பேச்சு வழக்கு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 

இதனை அடுத்து தற்போது நடிகர் கமலுடன் அபிராமி மீண்டும் இணைய உள்ளதாக வெளியான தகவல் ரசிகர்கள் இடையே உற்சாகத்தையும் மிகுந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kamalhaasan movie update


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->