வெளியான கமல்ஹாசன் படத்தின் அப்டேட்: உற்சாகத்தில் ரசிகர்கள்! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் கமலஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 2' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து கமலஹாசனின் 234 வது திரைப்படத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்குகிறார். இந்த படத்தின் அறிமுக வீடியோ வருகின்ற நவம்பர் 7ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

இயக்குனர் ஹெச் வினோத் கமலின் 233 வது திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. 

இதற்கிடையே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது கமலின் 233 வது படம் குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

அதன்படி இந்த படத்தின் பிரமோஷன் மற்றும் டீசர் நவம்பர் 6ஆம் தேதி கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kamal Haasan Movie Update


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->