"என் அப்பாவோட ஆசை நிறைவேடுச்சு" ஜெயம் ரவி நெகிழ்ச்சியில் கூறிய வார்த்தைகள்.!
JAYAM RAVI SPEECH ABOUT HER FATHER
தமிழ் சினிமாவில் ஜெயம்ரவி நடிக்கும் படம் என்றால், சிறப்பான கருத்துக்கள் நிறைந்திருக்கும் என்பது போன்ற தோற்றத்தை ரசிகர்கள் மனதில் வைத்து இருக்கின்றார் ஜெயம் ரவி. ஜெயம் ரவியின் அண்ணனான ராஜாவும் ஹீரோவாகத்தான் அறிமுகம் செய்துள்ளார்.
தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த ஜெயம் ரவி ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்து இருக்கின்றார். சமீபத்தில் கோமாலி என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதுபோலவே ஜெயம் ரவியின் அண்ணனும் இயக்குனராக பல வெற்றித் திரைப்படங்களை எடுத்துக் கொடுத்துள்ளார்.

இருவரும் புகழ்பெற்ற சகோதரர்களாக விளங்கும் நிலையில் ஜெயம் ரவி ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். அதில், "என்னுடைய தந்தை ஒரு இயக்குனராக அல்லது நடிகராக வேண்டுமென்ற கனவோடு சென்னை வந்தவர். ஆனால் எடிட்டர் தான் ஆக முடிந்தது. இருப்பினும் எனது அண்ணன் இயக்குனராகவும், நான் நடிகராகவும் முன்னேறி எனது தந்தையின் ஆசையை நிறைவேற்றி விட்டோம்.
அதற்காக அவர் மிகவும் பெருமை அடைந்துள்ளார். அவர் தனிமனிதன் என்ற புத்தகத்தை எழுதி இருக்கின்றார். அது மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும். அது போல எனது தாயும் மிகுந்த நல்ல குணங்கள் மிக்கவர். அவர் வேலியற்ற வேதம் என்ற புத்தகத்தை எழுதி இருக்கின்றார்." என நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.
English Summary
JAYAM RAVI SPEECH ABOUT HER FATHER