ஜெயிலர் படத்தின் கதை லீக்? சிறை, வில்லன், காவலன்! தீயாய் பரவும் ஜெயிலர் படக் கதை! - Seithipunal
Seithipunal


நடிகர் ரஜினிகாந்த்  நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். அதோடு கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமார் இந்த படத்தில் வில்லனாகவும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் சிறப்பு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகவுள்ளது.


 

ஏற்கெனவே, இந்த படத்தின் காவாலா பாடல் வெளியாகி இணையத்தில் வைரலான நிலையில், ஹுக்கும் எனத் தொடங்கும் 2வது பாடல் நேற்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.  இந்த படத்தின் கதை குறித்து மேலோட்டமான தகவல் ஒன்று வெளியாகி காட்டுத் தீ போல பரவி வருகிறது. அதன்படி, முக்கியக் குற்றவாளி ஒருவர் மத்திய சிறையில் இருக்கிறார். 

அவர் சிறைக்குள் இருப்பதால் அவரைச் சார்ந்த மற்ற கேங்க்ஸ்டர்களுக்கு பிரச்னைகள் வருகிறது. இதனால், அந்த முக்கியக் குற்றவாளியை சிறையிலிருந்து வெளியே கொண்டு வர முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த முயற்சிகளை எல்லாம் ஜெயிலரான ரஜினிகாந்த் எப்படி தடுக்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை என்று தகவல் பரவிவருகிறது. படம் வெளியானால் தான் இந்த உண்மையா என்பது தெரியும். 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jailer film story leak Is the rumor true


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->