இவங்கள வச்சு கரகாட்டக்காரன் 2 எடுக்க முடியாது! நடிகை கனகாவை உருவ கேலி செய்யும் கங்கை அமரன்..என்ன சார் இதெல்லாம்? - Seithipunal
Seithipunal


கரகாட்டக்காரன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை கனகா, ஒருகாலத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர். நடிகை தேவிகாவின் மகளான கனகாவை, இயக்குநர் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரன் தனது இயக்கத்தில் உருவான கரகாட்டக்காரன் திரைப்படத்தில் அறிமுகம் செய்தார். ராமராஜன் நாயகனாக நடித்த அந்த படம் மெகா ஹிட் ஆனதுடன், கனகாவுக்கும் மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தியது.

முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த கனகா, தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துப் பெரும் ரசிகர் வட்டத்தை உருவாக்கினார். ஆனால் அவரது வாழ்க்கையில் பெரிய திருப்பமாக அமைந்தது தாய் தேவிகாவின் மரணம். தாய்மீது அளவில்லாத பாசம் வைத்திருந்த கனகாவால் அந்த இழப்பை தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதன் பின்னர் மன உளைச்சலுக்கு ஆளான அவர், சினிமாவிலிருந்து முற்றிலுமாக விலகி, தனிமையான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தார்.

பல ஆண்டுகளாக பொதுமக்கள் பார்வையில் இருந்து விலகியிருந்த கனகா, சில வருடங்களுக்கு முன்பு நடிகை குட்டி பத்மினி அவரை நேரில் சந்தித்தபோது மீண்டும் கவனம் பெற்றார். அப்போது வெளியான புகைப்படங்களில் கனகாவின் தோற்ற மாற்றம் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்தது. அதன்பிறகு அவரை மீண்டும் சந்திக்கவும், பேட்டி எடுக்கவும் பலர் முயன்றாலும் அது நடக்கவில்லை.

இந்த நிலையில், கனகாவை சினிமாவில் அறிமுகப்படுத்திய கங்கை அமரன் சமீபத்தில் பேசிய கருத்துகள் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளன. ஒரு நிகழ்ச்சியில் கரகாட்டக்காரன் 2 குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, அவர் பதிலளிக்கையில், “இரண்டாம் பாகம் எடுத்தால் முதல் பாகம் தான் சிறந்தது என்று சொல்வார்கள். கவுண்டமணிக்கு உடல்நிலை சரியில்லை, செந்தில் இனி படங்களில் நடிப்பதில்லை, ராமராஜன் உருவம் மாறிவிட்டார், கனகா குண்டாகிவிட்டார். இப்போது இவர்களை வைத்து எப்படி இரண்டாம் பாகம் எடுக்க முடியும்?” என்று கூறினார்.

கனகா பல ஆண்டுகளாக தனிமையில் வாழ்ந்து வரும் நிலையில், அவரது உடல் தோற்றம் குறித்து இவ்வாறு வெளிப்படையாக பேசிய கங்கை அமரனின் கருத்து சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. மன உளைச்சலால் சினிமாவை விட்டு விலகிய ஒரு நடிகையை உருவ கேலி செய்வது சரியா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இந்த விவகாரம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ivangala Vachu Karakattakaran 2 cannot be made Gangai Amaran mocks actress Kanaka what is all this sir


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?


செய்திகள்



Seithipunal
--> -->