காந்தாரா.. RRR.. ஒபாமாவை கூட விட்டுவைக்காத ஃபீவர்.!  - Seithipunal
Seithipunal


பெரிய அரசியல்வாதிகள் மற்றும் தொழில் துறையைச் சேர்ந்தவர்கள் பலரும் சமூக வலைதளங்களில் சிறுபிள்ளைத் தனமாக விளையாடிக்கொண்டு பொழுதுபோக்கி வருகின்றனர். 

அந்த வகையில் அமெரிக்க முன்னாள் அதிபராக பராக் ஒபாமா வெளியிட்ட பதிவு தற்போது சமூக வலைதளங்களில் படு வைரலாகி வருகின்றது. அமெரிக்க முன்னாள் அதிபரான பராக் ஒபாமா தனது சமூக வலைதள பக்கத்தில் தான் பார்த்து ரசித்த சிறந்து 17 படங்களை பட்டியலிட்டு வெளியிட்டு இருந்தார். 

அந்த பதிவுதான் சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்று வருகின்றது. இதை கண்ட இந்திய திரைப்பட ரசிகர்கள் பலரும் ஒபாமாவிற்கு போட்டுள்ள கமெண்டில் இந்தியாவின் சிறந்த திரைப்படங்களாக பார்க்கப்படும் காந்தாரா மற்றும் ஆர் ஆர் ஆர் உள்ளிட்ட திரைப்படங்களை பார்க்குமாறு ஒபாமாவுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

மேலும், நீங்கள் என்னதான் சிறந்த 17 படங்களை பார்த்து இருந்தாலும் கூட இந்த இரண்டு படங்களையும் பார்க்கவில்லை என்றால் உங்களுக்கு இழப்பு என்றும் அந்த கமெண்டில் தெரிவித்து இருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian Cinema Fans suggest Movie For Obama 


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->