''இந்தியன் 2'' திரைப்படத்தின் நியூ அப்டேட்... வைரலாகும் போஸ்டர்.! - Seithipunal
Seithipunal


ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற ''இந்தியன்'' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. 

இந்த திரைப்படத்தில் சமுத்திரகனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. 

''இந்தியன் 2'' அறிமுக வீடியோ வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் இந்தியன் 2 திரைப்படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என பட குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. 

மேலும் அதில், புற்றுநோயை உருவாக்கும் என்பது போல 'ஊழல் புற்றுநோயை உருவாக்கும் உயிரை கொல்லும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian 2 Movie New Update


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->