"இன்னும் மிச்சமிருக்கு.. வெளியவரும்..." விஜய் அப்பாவின் அதிர்ச்சி பேட்டி.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் டாப் 4 ஹீரோக்கள் என்று எடுத்துக் கொண்டால் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் கமல் ஆகியோருக்கு அடுத்தபடியாக இருப்பவர் தளபதி விஜய். ரஜினிகாந்த் அளவிற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் விஜய் தற்போதைய பாக்ஸ் ஆபிஸ் ஹீரோக்களில் சூப்பர் ஸ்டாருக்கு இணையான வசூலை பெற்று வரும் நடிகர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஆரம்பக் காலகட்டங்களில் இவரது  நடிப்பு பயணத்திற்கு உறுதுணையாக இருந்தவர் அவரது தந்தையும் இயக்குனருமான எஸ். ஏ. சந்திரசேகர். தன்னுடைய படங்களில் விஜயை நடிக்க வைத்து அவரை ஒரு நடிகராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர். அதனைத் தொடர்ந்து பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும், பகவதி, கில்லி போன்ற திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக உயர்ந்தவர்.

சமீபகாலமாகவே இவருக்கும் இவரது பெற்றோருக்குமிடையே மோதல் நீடித்து வருவதாக ஒரு தகவல் வெளியாகி கொண்டிருக்கிறது. அதில் உண்மை இருக்குமோ என்று சந்தேகப்படும் அளவிற்கு விஜயும் தனது குடும்பத்துடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் தனது பெற்றோரின் 50 ஆவது திருமண நாளை முன்னிட்டு அவர்களது வீட்டிற்கு சென்று சந்தித்திருக்கிறார் விஜய். அப்போது விஜய் அவரது தாய் ஷோபனாவுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் ட்ரெண்டிங் ஆனது. ஆனால் தந்தை எஸ். ஏ. சந்திரசேகருடன் இருக்கும் புகைப்படங்கள் எதுவும் வெளிவரவில்லை.

இது பற்றி நிருபர் ஒருவர் இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகரிடம் கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்து பேசிய எஸ். ஏ. சந்திரசேகர் தப்பு செய்தால் ஊடகங்கள் கேள்வி கேட்கலாம். அதேபோல மகிழ்ச்சிகரமான செய்திகள் நடந்தாலும் ஊடகங்கள் அதனைப் பற்றி கேள்வி கேட்கலாம் என கூறினார். மேலும் மகன் விஜய் 10 வருடங்கள் கழித்து தங்கள் வீட்டிற்கு வந்ததை மிகவும் மகிழ்ச்சிகரமான ஒரு நிகழ்வு என தெரிவித்த அவர். விஜய் தாயுடன் இருக்கும் போட்டோ வந்ததைப் போலவே  இன்னும் பத்துக்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இருக்கின்றன அவை ஒவ்வொன்றாக வெளிவரும் என தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

If you make a mistake, the media may question sa chandra sekar shock interview


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->