வேள்பாரி படத்தை மூன்று பாகமாக இயக்குவேன் - இயக்குனர் சங்கர்! - Seithipunal
Seithipunal


வேள்பாரி படத்தை மூன்று பாகமாக இயக்குனர் சங்கர் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சங்கரி இயக்கத்தில் கமலஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படம் திரைக்கு வரும் இருக்கிறது. இந்த நிலையில் அடுத்த வேள்பாரி மன்னன் சரித்திர கதையை படமாக எடுக்கப் போவதாக சங்கர் அறிவித்துள்ளார்.

இது குறித்து சங்கர் அளித்துள்ள  பேட்டியில், வேள்பாரி சரித்திர நாவலை கொரோனா சமயத்தில் படித்தேன். என்னை மிகவும் ஈர்த்தது உடனடியாக திரைக்கதையாக உருவாக்கினேன். அதை மூன்று பாகங்களாக படமாக எடுக்க திட்டமிட்டு உள்ளேன். இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் இன்னும் முடிவாகவில்லை.

நான் ரசிகர்கள் பார்வையில் இருந்தே கதை மற்றும் காட்சிகளை உருவாக்குகிறேன். ஆஸ்கர் விருதை எதிர்பார்க்கவில்லை. இந்தியன் 2 படைப்பிடிப்பை நடத்திய போது இரண்டு பாகங்களுக்கான கதை அதுக்குள்ள இருந்தது அவற்றை வெட்டி ஏறிய  மனம் இல்லாமல் இந்தியன் 3 பாகத்தை உருவாக்கினோம். இந்தியன் 4 பார்க்கும் எடுக்கும் திட்டம் இல்லை.

கதாபாத்திரத்திற்க்காக கமல்ஹாசன் 70 நாட்கள் மேக்கப் போட்டு நடித்த சில பிரச்சனைகள் மத்தியில் கஷ்டப்பட்டு படத்தை முடித்தோம். எனது முதல்வன். அந்நியன். உட்பட பல படங்களின் கிளை மார்க் காட்சிகள் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் தொடர்ச்சியாகவே முடிந்து இருக்கும். ஆனால் அவற்றின் அடுத்த பாகங்கள் எடுப்பது குறித்து ஆலோசிக்கவில்லை என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

I will direct Velbari in three parts Director Shankar


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->