முத்த காட்சியில் நடிக்க மறுத்ததால் 3 படங்களை இழந்துவிட்டேன் .,வருத்தத்துடன் மனம் திறந்த பிரபல நடிகை.!
கட்டிபிடித்து நடிக்கவே அழுதேன்,அதுமட்டுமா முத்த காட்சியில் நடிக்க மறுத்ததால் 3 படங்களை இழந்துவிட்டேன் .,வருத்தத்துடன் மனம் திறந்த பிரபல நடிகை.!
பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமான மடோனா செபாஸ்டியன் முத்தம் கொடுக்க மறுப்பு தெரிவித்ததால் மூன்று படங்களை இழந்ததாக கூறியுள்ளார்.
பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமானவர் மடோனா செபாஸ்டியன்.
மேலும் இவர் தமிழில் விஜய் சேதுபதியுடன் இணைந்து காதலும் கடந்து போகும், கவண் ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது ஜுங்கா படத்திலும் நடித்து வருகிறார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், இப்படத்தில் நடிப்பதற்கு முக்கிய காரணம் கதையை கேட்டேன். என் கதாபாத்திரம் மிகவும் பிடித்தது. எனவே இப்படத்தில் நடிக்க சம்மதித்தேன்.மேலும் 5 நிமிடங்கள் வந்தாலும் பரவாயில்லை. ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் அதுதான் எனக்கு முக்கியம் என கூறினார்.
மேலும் எனக்கு புதிதாக ஏதாவது கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் அதனால், எனக்கு எந்த மொழி பிரச்சனையும் இல்லை. தமிழும் கற்றுக் கொண்டு வருகிறேன்.

மேலும் விஜய் சேதுபதியின் பாராட்டு எனக்கு ஊக்கம் அளிக்கிறது. இன்னும் நன்றாக பண்ண வேண்டும் என்ற பொறுப்பு வருகிறது. ஒவ்வொரு படம் பார்க்கும்போதும் அதில் இருந்து ஏதாவது ஒன்றை கற்றுக்கொள்கிறேன்.
மேலும் நான் லிப்லாக் காட்சியில் நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்ததால், கடந்த 3 மாதங்களில் மட்டும் 3 படங்களை இழந்துள்ளேன்.

மேலும் முதல் முறையாக கட்டிப்பிடிக்கும் காட்சியில் நடித்த போது, அம்மாவுக்கு போன் செய்து அழுதிருக்கிறேன். எனக்கு கூச்ச சுபாவம் அதிகம் அப்படியெல்லாம் நடிப்பது கொஞ்சம் கஷ்டம்.பொதுவாகவே மற்றவர்களிடம் பேசவே பயப்படுவேன். என்று கூறியுள்ளார் .
English Summary
i loss 3 movies for not acting in liplock kiss scene madona sebastian