படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கிய பிரபல நடிகை மருத்துவமனையில் அனுமதி.! - Seithipunal
Seithipunal


இந்தியில் பிரபல நடிகையாக உள்ளவர் பல்லவி ஜோஷி. இவர் கன்னடம், மலையாளம் மற்றும் மராத்தி உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், இரண்டு முறை சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றுள்ளார். 

இவர் கடந்த ஆண்டு திரைக்கு வந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற 'தி காஷ்மீர் பைல்ஸ்' என்ற படத்தில் பேராசிரியர் கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டு பெற்றார். தற்போது இவர் 'தி வாக்சின் வார்' என்ற படத்தில் நடித்து வருகிறார். 

இதற்கான படப்பிடிப்பு தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பின் முக்கிய காட்சியொன்றை படமாக்கிய போது திடீரென ஏற்பட்ட விபத்தில் பல்லவி ஜோஷி காயம் அடைந்துள்ளார். 

அதாவது, படப்பிடிப்பில் வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பல்லவி ஜோஷி மீது மோதியது. இதில், காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே பல்லவி ஜோஷி நடித்து வரும் 'தி வாக்சின் வார்' படத்தை தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் வருகிற ஆகஸ்டு மாதம் திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். மேலும், பல்லவி ஜோஷி "தி காஷ்மீர் பைல்ஸ்" படத்தை இயக்கிய விவேக் அக்னிகோத்ரியின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hindhi actor pallavi joshi injury in shooting spot


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->