நயந்தாரா பட பாடலுக்கு.. அழகான ரீல்ஸ்.! பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவின் வீடீயோ வைரல்.! - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சுஜிதா, ஸ்டாலின், ஹேமா, வெங்கட், குமரன், காவியா அறிவுமணி, சரவணன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த சீரியலில் நடித்து வந்த சித்ரா திடீரென கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் தற்கொலை செய்து கொண்டார். 

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மிக முக்கிய கதாபாத்திரமாக முல்லை கதாபாத்திரம் இருந்தது.‌ சித்ரா இறந்த பின்னர் இந்த கதாபாத்திரத்தில் காவியா அறிவுமணி நடித்து வருகின்றார். இருப்பினும் முல்லை கதாபாத்திரம் பெரிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக தற்போது ரசிகர்களால் கருதப்படவில்லை.

சித்ரா இறந்தபின்னர் மீனா கதாபாத்திரம் தான் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. அடிக்கடி கோபித்துக் கொண்டு சண்டையிடுவது போல பேசினாலும் சிறுபிள்ளை போல மிக எளிதாக ஜீவா அவரை சமாதானம் செய்து விடுவார். அவரது நக்கல், நையாண்டிகள் அனைத்திற்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும்.

சமீபகாலமாக அவருக்கு ரசிகர்கள் அதிகரித்துள்ளனர். 

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிப்பதற்கு முன்பு அவர் வசந்த் டிவி உள்ளிட்ட பல்வேறு சேனல்களில் தொகுப்பாளினியாக வும் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். பின்னர் ஆபிஸ் சீரியலில் நடிக்க ஆரம்பித்த அவருக்கு நிறைய சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படித்தான் ஹேமாவுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா கதாபாத்திரம் கிடைத்துள்ளது. இதற்கு முன்பு நிறைய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தாலும் கூட மீனா கதாபாத்திரம்தான் ஹேமாவுக்கு மிகப் பெரிய புகழை ஏற்படுத்திக் கொடுத்தது என்றால் மிகையாகாது.

சமூக வலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வரும் ஹேமா தற்போது தனது ரீல்ஸ் வீடீயோவை வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகின்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hema naan pizhai reels video viral


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->