90'S நடிகை சுகன்யா மகளா இவர்.?! இதோ வைரல் செல்ஃபி புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில்  முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் சுகன்யா. சென்னையைச் சேர்ந்த இவர்  1991 ஆம் ஆண்டு பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தின் மூலம்  கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவரது இயற்பெயர் ஆர் சி தேவி. பாரதிராஜா தான் திரைப்படத்திற்காக இவரது பெயரை சுகன்யா என  மாற்றி வைத்தார்.

புது நெல்லு புது நாத்து திரைப்படத்தை தொடர்ந்து சின்ன கவுண்டர், மகாநதி,  இந்தியன், செந்தமிழ் பாட்டு, வால்டர் வெற்றிவேல் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் குஷ்புவுக்கும் இவருக்கும் தான் 90களின் கால கட்டங்களில் பெரிய போட்டி நிலவியது. இவர் சத்யராஜ் சரத்குமார் மற்றும் ரகுமான் ஆகியோருடன் அதிக திரைப்படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்.

சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருதுகளை ஐந்து முறை வென்றுள்ளார். இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சார்ந்த ஸ்ரீதர் ராஜகோபால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் அமெரிக்காவிலேயே செட்டிலானார். எனினும் இவர்களது திருமணம் 2004 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.  சுகன்யா இதுவரை தனது குடும்ப வாழ்க்கை பற்றியோ குழந்தைகள் பற்றியோ   மீடியாவிலும் சமூக வலைதளங்களிலும்  எந்த ஒரு தகவல்களையும் பகிர்ந்து கொண்டதில்லை.

ஆனால் சமீபத்தில் சுகன்யா அவரது மகளுடனிருக்கும் புகைப்படம் ஒன்று  சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. அந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சுகன்யாவிற்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா என  கமெண்ட் செய்து வருகின்றனர். எல்லாத் துறை பிரபலங்களைப் போலவே வரும் தனது குழந்தைகளை  லைம் லைட் போடாமல்  பார்த்துக் கொண்டிருக்கிறார். தற்போது அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Have a look daughter of suganya


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->