தொழிலதிபரை கரம் பிடித்த நடிகை ஹன்சிகா.. திரைப்பிரபலங்கள் வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


தமிழில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான நடிகர் தனுஷ்க்கு  ஜோடியாக மாப்பிள்ளை மாப்பிள்ளை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஹன்சிகா மோத்வானி.

அதனைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.

தற்போது இவருடைய நடிப்பில் 105 மினிட்ஸ், பார்ட்னர், மை நேம் இஸ் ஸ்ருதி, ரவுடி பேபி உள்ளிட்ட திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் தமிழில் கடைசியாக வெளியான மஹா எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. தமிழிலும் தற்போது இவருக்கு வாய்ப்புகள் எதுவும் இல்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகை ஹன்சிகா சோஹேல் கதுரியாவை காதலிப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருந்தார். 

இந்த நிலையில் இவர்களது திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த அரண்மனை ஒன்றில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வந்தது.

பாரம்பரிய முறையில் நடைபெற்ற திருமணத்தின் ஒரு நிகழ்வாக நேற்று முன்தினம் ஹன்சிகா - சோஹேல் ஜோடியின் மெஹந்தி விழா நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் நகரத்தில் உள்ள 450 வருடங்கள் பழமை வாய்ந்த மண்டோடா ஃபோர்ட் அரண்மனையில் இன்று திருமணம் நடைபெற்றது. தற்போது இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Hansika Motwani married sohal


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->