திருப்பதி சென்ற 'ஹாய் நான்னா' படக்குழு: வைரலாகும் புகைப்படம்!
Hai Nanna film crew went to Tirupathi
ஷௌர்யுவ் இயக்கத்தில் நானி தனது 30வது படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு 'ஹாய் நான்னா' என பெயரிடப்பட்டுள்ளது.
வைரா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக மிருணாள் தாக்குர் நடித்துள்ளார். பொழுதுபோக்கான திரைப்படங்களை தேர்வு செய்யும் நானியின் திரைப்படங்களுக்கு தெலுங்கு மட்டுமின்றி தமிழிலும் ரசிகர்கள் உள்ளனர்.
இதனால் இந்த திரைப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. தற்போது இந்த படத்திற்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 7ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் படக் குழு திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்து முடித்துவிட்டு நடிகர் நானி பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
English Summary
Hai Nanna film crew went to Tirupathi