வெளியானது கோட் படத்தின் இரண்டாவது பாடல் ப்ரோமோ! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் படம் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (கோட்). இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கும் இந்த திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் 2வது பாடல் நாளை மாலை வெளியாகும் என்று படக்குழு தெரிவித்திருந்தது. இந்தப்பாடல் விஜய் மற்றும் மறைந்த பாடகி பவதாரிணி குரலில் உருவாகியுள்ளது.

இந்த நிலையில், 'கோட்' படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது, இரண்டாவது பாடலான 'சின்ன சின்ன கண்கள்' நாளை வெளியாக உள்ளதால் அதன் புரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது, அந்தப் பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

goat movie second song promo published


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->