கௌதம் கார்த்திக்குக்கு சிம்பு மேல இவ்ளோ நம்பிக்கையா.? அப்படி என்ன செய்தார் தெரியுமா.?! - Seithipunal
Seithipunal


மணிரத்தினம் இயக்கிய கடல் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இவர் நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் ஆவார். அந்தத் திரைப்படத்தினை தொடர்ந்து என்னமோ ஏதோ, வை ராஜா வை, ரங்கூன் போன்ற திரைப்படங்களில்  நடித்திருக்கிறார்.

தற்போது இவரது நடிப்பில் உருவாகி மார்ச் 30 ஆம் தேதி வெளியாகயிருக்கும் திரைப்படம் பத்து தல. இந்தப் படத்தில் சிம்புவுடன் இணைந்து நடித்திருக்கிறார். சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் இந்த திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நேரு உள் விளையாட்டு அரங்கில் வைத்து நடைபெற்றது.

இத்திரைப்படம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கௌதம் கார்த்திக் "இந்த திரைப்படம் மூலம் இயக்குனர் தன்னை வேறு ஒரு பரிணாமத்தில் திரையில் காட்டியிருப்பதாக தெரிவித்தார். தன்னை  இந்த கதாபாத்திரத்தில் பார்ப்பதற்கு தனக்கே பெருமையாக இருப்பதாகவும் கூறினார். மேலும் இந்த படத்திற்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கும்  அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

சிம்பு இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது கௌதம் கார்த்திக்கை பற்றி உணர்வுபூர்வமாக பேசியதை கேட்டு அழுதுவிட்டதாக தெரிவித்தார். படத்தின் அத்தனை பிசியான வேலைகளுக்கு மத்தியிலும்  ஒரு சில கதைகளை சிம்பு தனக்காக  கூறியதை நினைவுகூர்ந்த  கௌதம் கார்த்திக், சிம்புவின் இயக்கத்தில் நடிக்க தனக்கு ஆசையாகயிருப்பதாக தெரிவித்தார். எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் சரி அவர் எப்போது கூப்பிட்டாலும் சம்பளமில்லாமல் கூட தான் நடிக்க தயாராகயிருப்பதாக  உணர்ச்சி பொங்க தெரிவித்தார் கௌதம் கார்த்திக்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gautham karthik eagerly wait to act in simbu drection


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->