ஊதா டி-சர்ட் அணிந்து.. உதட்டோர புன்னகையுடன்.. புகைப்படம் வெளியிட கேப்ரில்லா.! - Seithipunal
Seithipunal


கேப்ரில்லா சார்ல்ட்டன் தமிழ் தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். நடன நிகழ்ச்சி ஒன்றின் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமான இவர், ஜோடி நம்பர் ஒன் பார்ட் 6-இல் வெற்றி பெற்றார். 9 வயதிலேயே திரைத்துறைக்கு வந்தவர், விஜய் தொலைக்காட்சியின் பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். 

இதன் மூலம் பிரபல தன்மையைப் பெற்ற கேப்ரில்லா விஜய் டிவியின் ஒன்பதாம் வகுப்பு c' பிரிவு சீரியலில் நடித்தார். தனுஷ் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக கடந்த 2012ம் ஆண்டில் நடித்திருப்பார். அதனைத் தொடர்ந்து சென்னையில் ஒரு நாள் மற்றும் அப்பா போன்ற திரைப்படங்களில் கேப்ரில்லா நடித்தார். 

கடந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற அவர், பிக்பாஸ் வழங்கிய தொகையை பெற்றுக்கொண்டு நிகழ்ச்சியின் இறுதிவரை போராடாமல் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

விஜய் டிவியின் முரட்டு சிங்கிள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கேப்ரில்லா அடுத்ததாக தற்போது ஈரமான ரோஜாவே சிசன் 2 சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகின்றார். இந்த நிலையில், தற்போது கேப்ரில்லா வெளியிட்டுள்ள போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gabrialla t shirt photo viral on insta 


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->