சல்மான் கானுக்கு ஜோடியாகும் பிரபல தமிழ் நடிகை!
famous Tamil actress paired Salman Khan
தமிழ் திரை உலகில் முன்னணி நாயகியாக வளம் வரும் த்ரிஷா, மௌனம் பேசியதே என்ற படத்தில் மூலம் அறிமுகமானார்.
இவர் சாமி, கில்லி, திருப்பாச்சி, ஆறு உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென ஓர் இடத்தை தக்க வைத்தார். நடிகர் அஜித்துடன் இணைந்து நடித்த மங்காத்தா திரைப்படத்திற்கு பிறகு த்ரிஷாவுக்கு சரியான திரைப்படம் அமையவில்லை.
இதனால் தவித்து வந்த த்ரிஷா விஜய் சேதுபதியுடன் ஜோடியாக 96 என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றார்.
இதனைத் தொடர்ந்து மணிரத்தினம் இயக்கிய பொன்னின் செல்வன் என்ற திரைப்படத்தின் மூலம் த்ரிஷா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
விஜய் நடித்த லியோ படத்தில் மலையாளத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக இவர் நடித்துள்ளார். த்ரிஷாவை முன்னணி கதாபாத்திரமாக வைத்து உருவாக்கியுள்ள 'தி ரோடு' திரைப்படம் அக்டோபர் 6 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் சல்மான்கான் நடிக்கும் புதிய படத்தில் த்ரிஷா அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
famous Tamil actress paired Salman Khan