முத்து படத்தில் முதலில் நடிக்கயிருந்தது இந்த நடிகையா.?! வியக்கவைக்கும் தகவல்.!  - Seithipunal
Seithipunal


40 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக ராஜாங்கம் நடத்திக் கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவரது ஸ்டைலும், நடிப்பும்  ரசிகர்களை உற்சாக ஆட்டம் போட வைக்கும். இன்றும் அதே துள்ளலான ஸ்டைலுடன் தனது திரைப்படங்களில் நடித்து வருபவர்.

இவருக்கு ஒரு படத்திலாவது ஜோடியாக நடித்து விட வேண்டும் என்பது சினிமா நடிகைகளின் கனவாக இருக்கும். இன்று இந்திய சினிமாவிலிருக்கும் அத்தனை முன்னணி நடிகைகளும் சூப்பர் ஸ்டாருடன் ஒரு படத்திலாவது நடித்திருக்கின்றனர். அந்த வகையில் சூப்பர் ஸ்டாருடன் ஜோடியாக நடிக்காத நடிகைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம்.


 
70களின் காலம் தொட்டு தற்போது வரை  ஜெயலலிதா, சித்தாரா, சுகன்யா மற்றும் நிரோஷா  ஆகியோர் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதைப்போல 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கிய ஒரு சுகன்யா. இவர் பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்திருந்தாலும் ரஜினிகாந்துடன் ஒரு திரைப்படத்தில் கூட இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைக்கவில்லை. 

தற்போதைய பேட்டி ஒன்றில் அதனைப் பற்றிய ரகசியத்தை மனம் திறந்திருக்கிறார் சுகன்யா. முத்து படத்தில் நடிப்பதற்காக கே.எஸ் ரவிக்குமார் முதலில் தன்னை அணுகியதாகவும் தனக்கு அந்த செய்தி கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். அதன் பிறகு தான் மீனா அந்த கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

famous tamil actress interview about missed oppourtunity to work with superstar


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->