ரசிகர் கூட்டமே ஆச்சர்யப்படும் வகையில் கொரோனா தடுப்பு நிதியை அறிவித்த பிரபல நடிகை.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் வேகமாக கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. இதனை தடுக்கும் பொருட்டு உலக நாடுகள் கோடிக்கணக்கில் செலவு செய்து வருகின்றன. 

பொது மக்களும் தங்களுடைய வீட்டிலேயே முடங்கி இருப்பதால், பசியும் பட்டினியுமாக பல்லாயிரக்கணக்கானோர் இருக்கின்றனர். இந்த நிலையில் இதனை சமாளிக்க திரையுலக பிரபலங்களும், தொழிலதிபர்களும் லட்சக்கணக்கில் நிதியுதவி செய்து வருகின்றனர். 

அந்த வகையில் பிரபல ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலினா ஜோலி ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை ஏழை மக்களின் பசியை போக்க வழங்குவதாக அறிவித்துள்ளார். இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 7 கோடியே 50 லட்சம் ஆகும். 

இதனை, தொடர்ந்து மேலும் சில அமெரிக்க நடிகர், நடிகைகளும் நிவாரண நிதியை கொடுத்து வருகின்றனர். கரோனாவால் பலியாவதை தடுக்க முடிகிறதோ இல்லையோ பசியால் யாரும் செத்துவிடக்கூடாது என்று சக மனிதனுக்காக வாரி வழங்கும் வள்ளல்களை நாம் நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும். 

இயற்கை பேரிடரின் போதும் இப்படி மனிதாபிமானம் அவ்வபோது  வெளிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Famous actress announced corona fund


கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
Seithipunal