தளபதி 67 படத்தில் இணைந்த முக்கிய நடிகர்.. வெளியான உறுதியான தகவல்.! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் விஜய் நடிப்பில் வாரிசு படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு பின் விஜய் தன்னுடைய 67ஆவது திரைப்படத்தில் தற்போது நடித்து வருகின்றார்.

லோகேஷ் கனகராஜ் இயக்குகின்ற இந்த திரைப்படத்திற்கு தளபதி 67 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்கான பூஜை ஏற்கனவே நடைபெற்று விட்டது. ஆனால், இதுவரை படவேலைகள் ஆரம்பித்து விட்டதை பட குழு அறிவிக்கவே இல்லை.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. குடியரசு தினத்தை முன்னிட்டு வரும் ஜனவரி 26 -இல் தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் தளபதி 67 திரைப்படம் குறித்து பஹத் பாசில் கூறுகையில், லோகேஷ் கனகராஜ் சினிமா யுனிவர்ஸ் என்ற அடிப்படையில் விஜய் 67 வது படத்தில் நானும் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fahad fazil act in thalapathy67 movie


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->