அம்மா நான் ஆஸ்கர் விருது வாங்கிட்டேன்! கண்ணீர் மல்க பேசிய நடிகர்! மொத்த அரங்கமும் கரகோஷம் எழுப்பி உற்சாகம்! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில், மொத்தம் 7 ஆஸ்கர் விருதுகளை வென்ற ’எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ திரைப்படம்  வென்றது.

சிறந்த நடிகை மிஷெல் யோவ், சிறந்த துணை நடிகர் கே ஹுய் குவான் சிறந்த துணை நடிகை ஜேமி லீ கர்டிஸ், சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்கம், சிறந்த எடிட்டிங்-க்கான ஆஸ்கர் விருதையும் வென்றது ”எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்” வென்றுள்ளது.

இதில், சிறந்த துணை நடிகருக்கான விருதினை பெற்ற நடிகர் கீ ஹுங்  குவான் பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

விருதினை பெற்ற பின் உணர்ச்சி வசப்பட்டு பேசிய கீ ஹுங்  குவான், “என் அம்மாவுக்கு 84 வயதாகிறது. அவர் இந்த நிகழ்ச்சியை டிவியில் பார்த்துக் கொண்டிருப்பார். "அம்மா, நான் ஆஸ்கர் விருது வாங்கிவிட்டேன்" பாருங்கள் என்று ஆனந்த கண்ணீர் வடிய பேசினார்.

அப்போது ஆஸ்கர் விருது வழங்கும் அரங்கமே கரகோஷங்களைத் எழுப்பியது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரின் கண்களிலும் கண்ணீர் வந்தது. 

தொடர்ந்து பேசிய  கீ ஹுங்  குவான், "ஒரு படகில் தொடங்கிய என் பயணம், அகதிகள் முகாமில் தான் ஓர் ஆண்டைக் கழித்தேன். தற்போது ஆஸ்கர் மேடையில் விருதினை பெற்றுள்ளேன்.  

இது போன்ற நிகழ்வுகள் திரைப்படங்களில் மட்டுமே நடக்கும் என்கிறார்கள். இதுதான் அமெரிக்கனின் கனவு. எனது தாய்க்கும் அவரின் தியாகத்திற்கும், என் காதல் மனைவிக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்றார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Everything Every where All At Once Oscar Support Actor


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->