மிகப்பெரிய நடிகனாக, இயக்குனராக வந்திருக்க வேண்டியவன் - பாரதிராஜா உருக்கம்! - Seithipunal
Seithipunal


கடந்த 1990-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘என் உயிர் தோழன்’. இந்த திரைப்படத்தில் நாயகனாகவும், கதை மற்றும் திரைக்கதை எழுதி அறிமுகமானவர் பாபு. 

தொடர்ந்து, 1991-ம் ஆண்டு பெரும்புள்ளி, பொண்ணுக்கு சேதி வந்தாச்சு போன்ற படங்களில் நடித்து, கிராமத்து கதைகளின் முன்னணி நாயகனாக பாபு தன்னை மெருகேற்றி கொண்டார்.

‘மனசார வாழ்த்துங்களேன்’ என்ற படத்தின் சண்டைக்காட்சியில் ‘டூப் போட்டுக்கொள்ளலால், உயரத்திலிருந்து பாபு குதித்தார். அதில் அவருக்கு முதுகுப்பகுதியில் பலத்த அடிப்பட்டு கடந்த 30 வருடமாக படுத்த படுக்கையானார் பாபு.

தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சைபெற்று வந்த பாபு, இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில், மிகப்பெரிய நடிகனாக, இயக்குனராக வந்திருக்க வேண்டியவன், ‘என் உயிர் தோழன்’ பாபு மறைவுக்கு இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவரின் இரங்கல் செய்தியில்,  “திரைத்துறையில் மிகப்பெரும் நட்சத்திரமாக வந்திருக்கவேண்டியவன் படப்பிடிப்பில் நடந்த விபத்தில் 30 வருடத்திற்கு மேலாக படுக்கையிலேயே தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து மறைந்த "என் உயிர் தோழன் பாபு" வின் மறைவு மிகுந்த மனவேதனை அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்” என்று பாரதிராஜா தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

En Uyir Thozhan hero Death


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->