சோகத்தில் திரையுலகம் - "தர்பார்" படத்திற்கு வசனம் எழுதிய ஸ்ரீ ராமகிருஷ்ணா காலமானார்.!
dubbing artist sri ramakrishna passed away
தமிழ் சினிமாவில் ஜென்டில்மேன், சந்திரமுகி உள்பட தமிழ், தெலுங்கு என்று சுமார் 300-க்கும் மேற்பட்ட படங்களுக்குமொழிபெயர்ப்பாளராக பணியாற்றியவர் ஸ்ரீ ராமகிருஷ்ணா. ஆந்திர மாநிலத்திலிருந்து சென்னைக்கு குடியேறிய இவருக்கு தமிழ் சினிமா முக்கிய பங்கு வகித்தது.
பிரபல இயக்குனர்கள் மணிரத்னம், ஷங்கரின் அனைத்து படங்களுக்கும் வசனம் எழுதியுள்ளார். அதுமட்டுமல்லாமல், சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த "தர்பார்" படத்திற்கு வசனம் எழுதினார். இதுவே அவரது கடைசி படமாக இருந்தது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் இருந்து வந்த பிரபல டப்பிங் வசனகர்த்தா ஸ்ரீ ராமகிருஷ்ணா நேற்றிரவு சென்னையில் காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகினர் இறங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
English Summary
dubbing artist sri ramakrishna passed away