பிக்பாஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியான செய்தி.! ஒளிபரப்புவதில் சிக்கல்.!! - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் நிகழ்ச்சி அனைத்து மக்களை தொலைக்காட்சி முன்னாடி அமரவைத்தது மறக்க முடியாது. இது தென்னிந்திய தொலைக்காட்சி வரலாற்றில் மிக முக்கிய இடம் பிடித்தது. இந்த நிகழ்ச்சி முதலில் ஹிந்தியில் தொடங்கியது. பிறகு கன்னடா, தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி என பல மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தி வருகிறது.

தமிழ், தெலுங்கில் இந்நிகழ்ச்சி 2 வது சீசன் முடிந்துள்ளது. தமிழில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இந்த இரண்டையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இது மாபெரும் வெற்றியைப் பெற்றது. இந்த இரண்டையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இது மாபெரும் வெற்றியைப் பெற்றது.

பிக்பாஸ் 3 வது சீசனையும் கமல் ஹாசன் தொகுத்து வழங்கவுள்ளார். இந்த வருட நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். 

பிக்பாஸ் 3 வது சீசன் குறித்து மெயின் ப்ரோமோ வீடியோ வெளியானது. மேலும், பிக் பாஸ் சீசன் 3  கலந்து கொள்ளவுள்ள நடிகர், நடிகைகளின் தகவல்கள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளது. பிக்பாஸ் வீட்டில் யார் செல்வது என்பது குறித்து இன்னும் அதிகாரபூர்வமான தகவல் வெளியாகவில்லை.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை இந்தியன் பிராட்காஸ்ட் ஃபவுண்டேசனின் (IBF) தணிக்கை சான்று பெறாமல் ஒளிபரப்பக்கூடாது என்று வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், பிக்பாஸ் 3 நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி வழக்கறிஞர் சுதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். ஆகையால் இந்த ஆண்டு குறித்த தேதியில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்க சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

do not telecast without IBF permission a complaint raised in Chennai high court


கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
Seithipunal