நீதிமன்றம் வழங்கிய ஆறுமாத சிறை - இயக்குனர் லிங்குசாமி வெளியிட்ட பரபரப்பு அறிக்கை.! - Seithipunal
Seithipunal


நடிகர் கார்த்திக், சமந்தா நடிப்பில் 'எண்ணி ஏழு நாட்கள்' என்ற திரைப்படத்திற்காக, இயக்குனர் லிங்குசாமி பிவிபி கேப்பிட்டல் பைனான்ஸ் நிறுவனத்தில், ஒரு கோடியே மூன்று லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார்.

ஆனால், இதற்காக லிங்குசாமி அளித்த காசோலை பணமில்லாமல் வங்கியில் திரும்பி வந்திருப்பதாகவும், எனவே காசோலை மோசடி வழக்கில் லிங்குசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், நேற்று  இயக்குனர் லிங்குசாமி மற்றும் அவருடைய சகோதரர் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கின்றது.

இந்நிலையில், இன்று இயக்குனர் லிங்குசாமி விடுத்துள்ள விளக்க அறிக்கையில், "இன்று பல ஊடகங்களில் பரபரப்பாக வரும் என்னை பற்றிய ஒரு செய்திக்கு தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டியது என் கடமை.

இந்த வழக்கு பிவிபி கேப்பிடல் லிமிடெட் மற்றும் எங்களது தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா பிரைவேட் லிமிடெட் இடையிலானது. 

அவர்கள் தொடுத்த வழக்கின் மேல் இன்று மாண்புமிகு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. நாங்கள் இன்று மாண்புமிகு நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு எதிராக உடனடியாக மேல் முறையீடு செய்து சட்டரீதியாக சந்திக்க உள்ளோம்" என்று இயக்குனர் லிங்குசாமி தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Director Lingusami Statement


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->