மீண்டும் இயக்கத்தில் களமிறங்கும் பாரதிராஜா.. வெளியான அசத்தல் தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர் பாரதிராஜா. இவர் 80 மற்றும் 90களில் இயக்கிய திரைப்படங்கள் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. கிராமத்து இயற்கை சூழலை தனது திரைப்படங்கள் மூலம் வெளிக்காட்டுவதில் கைதேர்ந்தவர் இயக்குனர் பாரதிராஜா. இதுவரை இவர் 6 தேசிய விருதுகளை வென்றுள்ளார்.

இந்த நிலையில் சமீப காலமாக இவர் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இறுதியாக இவர் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்திருந்தார். மேலும் தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் 'நா நா' மற்றும் தங்கர் பச்சான் இயக்கும் 'கருமேகங்கள் கலைகின்றன' உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இயக்குனர் பாரதிராஜா மீண்டும் திரைப்படம் இயக்க உள்ளார். அந்த வகையில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதையை மையமாகக் கொண்டு இயக்கி நடித்து வருகிறார். தேனி சுற்றுவட்டார பகுதிகளில் உருவாகும் இந்த படத்திற்கு 'தாய்மெய்'  என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Director bharathiraja again directed new movie


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->