மனைவியுடன் மோதும் நடிகர் தனுஷ்.! - Seithipunal
Seithipunal


அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த திரைப்படம் வரலாற்று பாணியில் உருவாகியுள்ளது. 

இந்த திரைப்படத்தில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதீஷ், ஜான் கோக்கன், சுமேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

இந்த திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் இடையே கவனத்தை பெற்றது. இதனை அடுத்து படத்தின் போஸ்டர் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்த திரைப்படம் வருகின்ற 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என பட குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. 

'கேப்டன் மில்லர்' திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாகும் என பட குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது. 

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினியின் சிறப்பு தோற்றத்தில் உருவாகியுள்ள 'லால் சலாம்' திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதன் மூலம் தனுஷ் படம் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் இரண்டும் பொங்கல் அன்று வெளியாக உள்ளதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dhanush vs Aishwarya Rajinikanth


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->