டிடியை குளிரவைத்த விக்ரம்..! ஆஹா.. என்னா மனுஷன்யா.?! - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருகின்ற விக்ரம் தற்போது துருவ நட்சத்திரம், கோப்ரா, மகான் மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். 

இதில், இவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்துள்ள மகான் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் அவருடைய மகன் துருவ் விக்ரமும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியாகப் போவதாக கூறப்பட்ட நிலையில் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படம் குறித்த இன்டர்வியூ ஒன்றை பிரபல தொகுப்பாளினி டிடி தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் அவர் விக்ரமுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு விக்ரமை மிகவும் புகழ்ந்துள்ளார். 

தன்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள அனுமதி கேட்டபோது தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி எனக்கு மேட்சாக சட்டையை மாற்றிக் கொண்டு மிகவும் எளிமையாக நடந்து கொண்டார். மிக்க நன்றி என்ற டிடி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dd about vikram


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->