ஆர்.ஆர்.ஆர் படக்குழுவுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து.!  - Seithipunal
Seithipunal


இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியான திரைப்படம் 'ஆர்ஆர்ஆர்'. இந்த படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25-ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

மேலும், இந்த படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியா பட், பிரகாஷ் ராஜ் மற்றும் சமுத்திரகனி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படம் நல்ல வசூலைப் பெற்றது. சமீபத்தில் ஆஸ்கார் விருது நாமினேஷனிலும் இந்தப் படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் இடம்பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து, கோல்டன் குளோப் விருது நாமினேஷன் பட்டியலில் இரண்டுப் பிரிவுகளில் இடம்பிடித்துள்ளது.

இந்தப் படத்தில், எம்.எம்.கீரவாணி இசையமைத்த 'நாட்டு நாட்டு' பாடலுக்கு இந்த விருது கிடைத்துள்ளது. அதன் படி, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று நடைபெற்ற இந்த விழாவில் இயக்குனர் ராஜமவுலி மற்றும் படக்குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இந்த விருதினை பெற்றனர்.

இந்த கோல்டன் குளோப் விருதை வென்ற படக்குழுவுக்கு பல்வேறு தரப்பில்இருந்தும், வாழ்த்துக்கள் தெரிவித்து வருக்கின்றனர். இத்தகைய நிலையில், கோல்டன் குளோப் விருதை வெற்றிபெற்ற  RRR படக்குழுவுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர் தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டு இருக்கின்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

David Warner wishes to RRR movie team


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->