அடப்பாவமே.! புதிதாக நடிக்க வந்த வடிவேலுவை.. நெஞ்சில் எட்டி மிதித்து.. கவுண்டமணி ஓடவிட்ட சம்பவம்.!
Comedian goundamani stepped on comedian vadivelu for true
நகைச்சுவை நடிகர்களில் மிகவும் உச்சம் தொட்ட நடிகர் வடிவேலு ஆவார். இவரின் படங்கள் தற்பொழுது அவ்வளவாக வெளிவராத போதிலும் இவரின் வசனங்கள் மீம்ஸ்களாகவும், டெம்ப்ளேட்களாகவும், சமூக வலைத்தளத்திலும், மக்களிடையிலும், இன்றும் இடம்பெற்று வருகிறது.
நகைச்சுவை நடிகர் வடிவேலுவை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது நடிகர் ராஜ்கிரன் தானாம். மதுரையில் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்ற ராஜ்கிரன் அங்கு வடிவேலு அவர்களின் நகைச்சுவை பேச்சு அவருக்கு மிகவும் பிடித்துப் போகவே . தனது படமான "என் ராசாவின் மனசிலே" என்ற படத்தில் அவருக்கு முதல் முறையாக நடிக்க வாய்ப்பு தந்திருக்கிறார் ராஜ்கிரண்.
அந்த படத்தில் கவுண்டமணி முதல் முறையாக நகைச்சுவை நடிகராக நடித்திருந்தார். அப்போது நகைச்சுவை நடிகர் சிசர் மனோகரை, இயக்குனர் டீ வாங்கி வர சொல்லி அழைத்தாராம். அப்போது அங்கு நகைச்சுவை காட்சி ஒன்று வடிவேலுவை வைத்து படமாக தயாராகி கொண்டிருந்தனர்.
அப்போது கவுண்டமணி செந்திலிடம், நம்மை தவிர வேறு யாரும் புதிதாக காமெடி செய்ய வந்திருக்கிறார்களா? என்று செந்திலிடம் கேட்டார். வடிவேலுவின் ஒரு சீன் இருப்பதாக சொன்னார்களாம்.
அதற்கு கவுண்டமணி சொன்னாராம் அவனவன் கோடம்பாக்கத்தில் சினிமா வாய்ப்புக்காக அலைந்து கொண்டிருக்கிறான். இவருக்கு பிடித்திருக்கிறது என்று ஒருத்தவனை கூப்பிட்டு வந்து நடிக்க சொல்கிறாரே, இதெல்லாம் என்ன நியாயம்? என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு ராஜ்கிரன் சொல்லியிருக்கிறார். வெறும் ஒரு சீனில் மட்டும்தான் வடிவேலு நடிக்க போவதாகவும் அதுவும் உங்களிடம் மிதி வாங்குவது போன்றிருக்கும் அவ்வளவுதான் என்று சொல்லியிருக்கிறார். அந்த சீன் எடுக்கும் பொழுது கவுண்டமணி நிஜமாகவே வடிவேலுவின் நெஞ்சில் "வருவியா வருவியா" என்று மிதித்திருக்கிறார் கவுண்டமணி. இதை சிஸ்ஸர் மனோகர் அவரின் ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.
English Summary
Comedian goundamani stepped on comedian vadivelu for true