கட்சியே வேண்டாம்டா சாமி., தெறித்து ஓடும் எஸ்.ஏ.சந்திரசேகர்.! அதிர்ச்சி கொடுத்த அறிவிப்பு.!  - Seithipunal
Seithipunal


நடிகர் விஜயின் பெயரில் கட்சி துவங்கிய அவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தங்களது கட்சியின் பெயரை பதிய வேண்டாம் என்று தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி இருப்பது பரபரப்பை கிளப்பி இருக்கின்றது. 

சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜயின் பெயரில் அவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் புதிய அரசியல் கட்சி துவங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. 

இந்த நிலையில் எனக்கும், அந்த கட்சிக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என விஜய் அறிவித்ததை தொடர்ந்து விஜய்யின் தாயார் ஷோபாவும் கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து விலகிய நிலையில், கட்சி தலைவராக அறிவிக்கப்பட்ட ஏ.கே.ராஜாவும் பதவியில் இருந்து விலகினார்.

இத்தகைய சூழலில் தற்போது தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி இருக்கின்ற விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நடிகர் விஜய் பெயரில் துவங்கப்பட்ட கட்சியின் மீது விஜய்க்கு அதிருப்தி இருக்கின்றது. எனவே, கட்சியின் பெயரை பதிவு செய்ய வேண்டாம் என்று கடிதம் எழுதி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chandrasekar letter to election commission


கருத்துக் கணிப்பு

தமிழக அரசின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..
கருத்துக் கணிப்பு

தமிழக அரசின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..
Seithipunal