வானில் உயர்ந்து நின்ற "துணிவு"..!! ப்ரோமோஷன் வீடியோவை வெளியிட்டார் போனி கபூர்..!! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார் தற்பொழுது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் "துணிவு" எனும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, மகாநதி சங்கர் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். துணை படம் வரும் பொங்கலுக்கு வெள்ளி திரையில் வெளியாக உள்ளது.

தற்பொழுது துணிவு படத்திற்கான விளம்பரப் பணிகளை தயாரிப்பு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் துணிவு படத்தில் இடம்பெற்றுள்ள 3 பாடல்கள் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே தயாரிப்பாளர் போனி கபூர் படத்தை விளம்பரம் செய்யும் நோக்கோடு துபாயில் "துணிவு" படத்தின் பேனர் கொண்டு  ஸ்கைடைவிங் மூலம் வீடியோ எடுத்து படத்திற்காக விளம்பரம் செய்துள்ளார்.

அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் போனி கபூர் வெளியிட்டுள்ளார். துணிவு படத்தின் ப்ரோமோஷன் வீடியோவை அஜித் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர். போனி கபூரின் ட்விட்டர் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Boney Kapoor has released a promotional video for Thunivu


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->