ஜெயிலர் படத்தின் வசூல் டுபாக்கூர் ரிப்போர்ட்.. ரஜினியை வம்புக்கிழுக்கும் ப்ளூ சட்டை மாறன்.! - Seithipunal
Seithipunal


ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கிய திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகி திரைத்துறை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார்.

மேலும், இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், விநாயகன், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு வெளியான இந்த திரைப்படம் வெற்றிகரமாக தற்போது திரையரங்குகளில் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படம் வெளியான 6 நாட்களில் உலகம் முழுவதும் மொத்தமாக ரூ.450 கோடி வசூல் செய்துள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் ரூ.260 கோடி வசூல் செய்துள்ளது. ஜெயிலர் திரைப்படத்திற்கு அனைத்து ரசிகர்களின் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்கள் வருவதால், இந்தப் படத்தில் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் மொத்தமாக 450 கோடிக்கு வசூல் செய்த நிலையில், தற்போது ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் வெறும் 6 நாட்களில் விக்ரம் படத்தின் வசூல் சாதனையை முறியடித்ததுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரபல யூடியூபரும், திரைப்பட விமர்சகருமான ப்ளூ சட்டை மாறன் ஜெயிலர் திரைப்படத்தின் வசூல் நிலவரம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இன்னைக்கி 500 கோடியை தாண்டி பொன்னியின் செல்வனை காலி பண்ணப்போறோம். இதையெல்லாம் பாத்தா ஒனக்கு வயிறு எரியல?'


'எனக்கு ஏம்ப்பா எரிய போகுது? நீங்க சொல்லுறது எல்லாம் டுபாக்கூர் ரிப்போர்ட்ன்னு  எல்லாருக்கும் தெரிஞ்சி போனதால ரொம்ப சந்தோசமா இருக்கேன். நான் உங்ககிட்ட திரும்பவும் ஏதாவது கேள்வி கேட்டா... 700 கோடின்னு வசூலை ஏத்தி விடுவீங்க...' என பதிவிட்டுள்ளார்.

தற்போது இந்த பதிவு ரஜினி ரசிகர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து ரஜினி ரசிகர்கள் இவரது பதிவுகளில் பதிலடி கொடுத்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Blue sattai maran tweet about jailor collection


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->