24 மணி நேரமும் ஒளிபரப்பாக போகும் பிகில் படம்? உச்சகட்ட கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


தீபாவளி அன்று வெளியாக உள்ள நடிகர் விஜயின் பிகில் படம் மற்றும் நடிகர் கார்த்திக்கின் கைதி படங்களை திரையரங்குகளில் 24 மணி நேரமும் திரையிட சிறப்பு அனுமதி கேட்டு தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை மனுவை  அளித்துள்ளனர்.

தீபாவளி அன்று வெளியாக இருந்த நடிகர் விஜய் சேதுபதி நடித்த சங்கத்தமிழன் திரைப்படம் வெளியீட்டில் இருந்து பின்வாங்கி இருக்கும் நிலையில், தீபாவளிக்கு முன்னதாக வெள்ளிக்கிழமை 25 ஆம் தேதி நடிகர் விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி உள்ளிட்ட இரண்டு படங்களும் வெளியாக உள்ளன.

பிகில் படத்திற்கு அதிகாலை காட்சிக்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் என்று சிலர் வதந்தி பரவி வருகின்றது. 

இந்தநிலையில், தமிழக திரையுலக வரலாற்றில் முதல் முறையாக பிகில் மற்றும் கைதி ஆகிய இரண்டு படங்களுக்கு 24 மணி நேர தொடர் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்ட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தை 24 மணிநேரமும் ஒளிபரப்ப தமிழக அரசின் அனுமதி கேட்டு தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தனியாகவும் , படத்தின் தயாரிப்பாளர்கள் தனியாகவும் தமிழக அரசிடம் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.

24 மணி நேர தொடர் சிறப்புக்காட்சிக்கு இரு நாட்களுக்கு முன்பாகஅனுமதி கிடைத்துவிடும் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

bigil film 24 hours in theaters


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->