பிக்பாஸ் சீசன் 7 - பயங்கர எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இறுதி பட்டியல்.! - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் சீசன் 7 - பயங்கர எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இறுதி பட்டியல்.!

தமிழில் பிக்பாஸ் சீசன் 7 நாளை துவங்கவுள்ளது. இந்த முறை பிக்பாஸ்க்கு இரண்டு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 20 பேர் கலந்துகொள்வார்கள். இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள பிரபலங்களின் முழு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு :- மாடல் அனன்யா ராவ், பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை விணுஷா தேவி, குக் வித் கோமாளி புகழ் நடிகை விசித்ரா, பிரபல நடிகர் மற்றும் பாடகர் மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரன் உள்ளிட்டோரும் இந்த பிக்பாஸ் சீசனில் நடிக்கிறார்கள். 

அதேபோல், வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகா வனிதா, நடன இயக்குனர் மணிச்சந்திராவ், விஜய் டிவியின் ஆஃபிஸ் சீரியல் புகழ் நடிகர் விஷ்ணு விஜய், நடிகை தர்ஷா குப்தா உள்ளிட்டோரும் பங்கேற்பாளர்கள் பட்டியலில் உள்ளனர். 

இவர்களைத் தொடர்ந்து, விஜய் டிவி புகழ் சரத், சுழல் வெப் சீரிஸ் நடிகர் ஜான்சன், நடிகைகள் உமா ரியாஸ், மூன்நிலா, இந்திரஜா ரோபோ ஷங்கர், பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் சரவணன் விக்ரம், பாலசரவணன் மற்றும் சத்யா ஆகியோரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர்.

மேலும், மூத்த திரைப்பட நடிகர் பப்ளு பிரித்விராஜ், நடிகை ரவீணா, விஜே அர்ச்சனா, நடன இயக்குனர் விஜய் வர்மா உள்ளிட்டோரும் பிக்பாஸின் இரண்டாவது வீட்டில் வசிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

bigg boss season 7 contestents final list


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->