சமூக வலைதளங்களை கலக்கும் அயலி.! பெண்ணை பெற்றவர்களை கேள்வி கேட்கும் வெப்சீரிஸ்.!  - Seithipunal
Seithipunal


அறிமுக இயக்குனரான முத்துக்குமார் இயக்கத்தில் இஸ்ட்ரல்லா ஸ்டோரிஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள தமிழ் வெப் சீரிஸ் தான் அயலி. ஸீ 5- ஓடிடியில் இது வெளியாகியுள்ளது. 

எட்டு எபிசோடுகளாக உருவாகியுள்ள இந்த வெப்சீரிஸில் அபி நட்சத்திரா ஹீரோயினாக நடித்துள்ளார். வீரப்பண்ணை எனும் அந்த கிராமத்தில் ஒரு பெண் வயதுக்கு வந்தவுடன் அவரை திருமணம் செய்து வைக்கும் பழக்கம் இருந்துள்ளது.

எனவே இந்த கிராமத்தில் இருந்து கொண்டு, தான் வயதுக்கு வந்ததை மறைத்து ஒரு பெண் தனது மருத்துவர் கனவை எப்படி அவர் நிறைவேற்றுகிறார். என்பதை காட்டுவதாக இந்த வெப் சீரிஸ் அமைந்துள்ளது. 

1990 காலகட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த சீரிஸ் பெண்களுக்கு எதிரான பல கட்டுக் கதைகளையும், பண்பாடு என்ற பெயரில் இருக்கும் கட்டமைப்பையும் அப்பட்டமாக காட்டும் விதமாக அமைந்துள்ளது. சமூக வலைதளங்களில் இந்த அயலி வெப் சீரிஸ் தான் தற்போது ஹாட் டாபிக்காக விவாதிக்கப்பட்டு வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ayali web Series


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->